வேகமாக பரவும் டெங்கு! அடுத்தடுத்து பலியாகும் உயிர்கள்! டெங்கு கொசுக்களிடம் தப்புவது எப்படி?

மழைக்காலம் தொடங்கி விட்டதால் டெங்கு காய்ச்சல் வராமல் எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது என்பதை பார்ப்போம்.


தலைவலி, சளி, இருமல், குழந்தைகளின் உடலில் அலர்ஜி ஏற்பட்டது போன்று சிவப்பு நிற தடுப்புகள் இருந்தால் உடனடியாக எவ்வித தாமதமும் இன்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் 

மழை நீர் தேங்கும் இடங்கள், குளிர்சாதனப் பெட்டிக்கு பின்புறம் நீர் தேங்கும் இடத்தில் உற்பத்தியாகும் டெங்கு கொசு பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும். வீட்டிற்குள்ளோ அல்லது வீட்டை சுற்றியோ பழைய டயர், உடைந்த பானை, பாட்டில், பிளாஸ்டிக் கவர், இளநீர் மற்றும் தேங்காய்க் கூடு ஆகியவற்றை அகற்றிவிடவேண்டும்.

வாரம் மூன்று முறை நிலவேம்புக் கசாயம் குடித்தால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாது. வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். சுத்தமான நீரை தேக்கி வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்கவேண்டும். ஏனேனில் சுத்தமான நீரிலும் கொசுக்கள் உற்பத்தியாகும்.

பொது சுகாதாரத் துறையும், உள்ளாட்சித் துறையும் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. சென்னையில் மட்டும் 360 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்துள்ளது. மழை நீர் தேங்கி டெங்கு பரவக் காரணமாக இருந்ததாக, வணிக வளாகங்கள், வீடுகள் ஆகியவற்றில் 27 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிப் பகுதிகள் முழுவதும் தீவிரமாக மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது . டெங்கு காய்ச்சல் வந்தால் ஒன்றரை லட்சத்துக்கு கீழ் ரத்த தட்டணுக்கள் சென்றால் மட்டுமே ஆபத்தான நிலை என்றும், டெங்கு தாக்குதலுக்குள்ளாகி ரத்த தட்டணுக்கள் குறைபாட்டால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க போதுமான ரத்தம் கையிருப்பு உள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.