டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் மர்ம மரணம்! தூக்கில் சடலமாக தொங்கினார்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த தமிழக மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார்.


வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரிஷி ஜோஸ்வா டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட்களாக மாணவரை காணவில்லை என்று கல்லூரி நிர்வாகிகளும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கல்லூரியின் தரைத்தளத்திற்கு கீழே அமைந்துள்ள படிப்பகத்தில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

உள்ளே சென்று பார்த்தபோது அன்பு மாணவர்கள் ரிஷி தூக்கில் சடலமாக தூங்கியுள்ளார். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிஷியின் அரைகிலோ அவரது உடமைகளை தற்கொலைக்கான காரணத்தை தெரிவிக்கும் கடிதம் எதுவும் இல்லை.

மேலும் இரண்டு நாட்களாக கல்லூரி படிப்பகத்தில் மாணவரின் உடல் இருந்ததை எப்படி யாரும் கவனிக்காமல் இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பப்படுகிறது. இதனிடையே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக மாணவர் ரிஷி தன்னுடைய துறைத் தலைவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் இறுதி செமஸ்டர் ஐ தான் அடுத்த ஆண்டு எழுத உள்ளதாக ரிஷி ஜோஷ்வா கூறி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அண்மையில் முடிந்த செமஸ்டர் தேர்வு எழுதாத ரிஷி ஜோஸ்வா மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறினாலும் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.