பற்றி எரிந்த கார்! கணவன் கண் முன் எரிந்து சாம்பலான மனைவி! குழந்தைகள்!

டெல்லியில் கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் பெண்ணும் அவரது இரு மகள்களும் உயிரிழந்த விபத்தில் அந்தப் பெண்ணின் கணவனே திட்டமிட்டுக் கொன்றிருக்கக் கூடும் என பெண்ணின் தாய்வீட்டினர் குற்றம்சாட்டியுள்ளனர்


டெல்லியைச் சேர்ந்த  ரஞ்சனா மிஸ்ரா என்ற பெண்ணின் குடும்பத்தினர் காரில் அக்‌ஷர்தாம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது அக்‌ஷர்தாம் பாலத்தில் அவர்களின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் காரின் முன் இருக்கைகளில் இருந்த ரஞ்சனாவின் கணவரும் 3-வது மகளும் உடனடியாக வெளியேறி உயிர் பிழைத்தனர். ஆனால் பின் இருக்கையில் இருந்த ரஞ்சனாவும் மற்றா இரு மகள்களான ரிதி, நிக்கி ஆகியோரும் உயிர் தப்பிக்க முடியாமல் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழதனர். 

விசாரணையில் எரிவாயுவில் அந்தக் கார் ஓடிய நிலையில் எரிவாயுக் கசிவால் தீ விபத்து நேர்ந்தது. இந்நிலையில் ரஞ்சனாவையும் இரு பெண் குழந்தைகளையும் அவரது கணவன் திட்டமிட்டுக் கொன்றிருக்கக் கூடும் என தாய் வீட்டு உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். திருமணமாகி 13 ஆண்டுகளில் ரஞ்சனாவை அவரது கணவர் தற்போது தான் முதன் முறையாக வெளியில் அழைத்துச் சென்றிருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

கொலைத் திட்டம் இல்லாமல் அவர் அவர்களை வெளியில் அழைத்துச் சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். முதல் பெண் குழந்தை பிறந்ததில் இருந்து அவர் ரஞ்சனாவைக் கொடுமைப்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ரஞ்சனாவின் கணவர், தனது மனைவி குழந்தைகளை பெரிதும் விரும்புவதாகவும், தான் ஏன் அவர்களை கொல்ல வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் கொலை என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள போலீசார் தற்போதைய நிலையில் அது குறித்து சொல்ல ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.