நெகிழ வைக்கும் ராணுவ மேஜரின் மனைவி! முதலில் தேசத்திற்காக கணவனை பறிகொடுத்தார்! தற்போது தன்னையே கொடுக்கிறார்!

டெல்லி: இந்திய ராணுவத்தில் மேஜராக பணிபுரிந்து வீர மரணமடைந்த காஸ்துப் ராணேவின் மனைவியும் தற்போது ராணுவத்தில் இணைந்துள்ளார்.


கடந்த 2018 ஆகஸ்ட் 7ம் தேதியன்று, மேஜர் காஸ்துப் ராணே ஜம்மு காஷ்மீர் மாநிலம், குரெஸ் பகுதியில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் வீர மரணமடைந்தார். பெற்றோருக்கு ஒரே மகனாக இருந்த ராணே 2011ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்து,  2018ல் வீர மரணத்தை தழுவினார்.

அவரது வீரத்தை பாராட்டி இந்திய அரசு சார்பாக, 2018 ஆகஸ்ட் 15 சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது, வீரப்பதக்கம் அவரது குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில், தனது கணவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் கஸ்துப் ராணேவின் மனைவி கனிகா தற்போது இந்திய ராணுவத்திற்கு முறையான தேர்வு எழுதி, செலக்ட் ஆகியுள்ளார்.

சென்னையில் அவர் பயிற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளார். தனது 3 வயது மகனை வளர்த்து ராணுவத்தில் சேர்ப்பேன் என்றும், கனிகா உறுதிபட தெரிவித்துள்ளார். இதே போல் விமானப்படையிலும் விபத்தில் வீர மரணம் அடைந்த மேஜர் ஒருவரின் மனைவி அண்மையில் விமானப்படையில் இணைந்தார்.