தனிமையில் இருந்த பெண் டாக்டருக்கு நேர்ந்த கொடூரம்! தலைமறைவான ஆண் டாக்டருக்கு வலை!

பெண் டாக்டர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய டெல்லியில் உள்ள ரஞ்சித் நகரில் கரிமா மிஷ்ரா என்ற பெண் டாக்டர் வசித்து வந்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரை சேர்ந்த இவர், டெல்லியில் தங்கி, எம்டி தேர்வுக்கு தயாராகி வந்தார்.

இவர், நேற்று (செவ்வாய்) இரவு தனது கசின் ஒருவரை நேரில் சந்தித்துவிட்டு, நள்ளிரவில் வீடு திரும்பினார். ஆனால், இன்று (புதன்) அவர் கத்திக்குத்து காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். 

இதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். அதேசமயம், பெண் டாக்டரின் அண்டை வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த மிஸ்ரா என்பவர் தலைமறைவாகியுள்ளார். அவரும் எம்டி படிப்புக்காக தயாராகி வந்தவர். பெண் டாக்டரை கொன்றது மிஸ்ராவாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.