அனுமதி இல்லாமல் இந்தியாவில் இயங்கும் கூகுள் பே! விரைவில் விதிக்கப்படுகிறது தடை!

மும்பை: உரிய அனுமதி இன்றி எப்படி கூகுள் பேமண்ட் செயல்படுகிறது, என்று டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான கூகுள் பேமண்ட், இந்தியா உள்ளிட்ட நாடுகளில், பணப்பரிவர்த்தனை சேவை வழங்கி வருகிறது. ஆனால், இந்தியாவில் சேவை வழங்குவதற்கு, கூகுள் பேமண்ட் முறையான அனுமதி எதுவும் வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதன்பேரில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நிதிமன்றம், முறையான அனுமதியின்றி, எப்படி டெல்லி உயர்நீதிமன்றம் செயல்பட அனுமதி அளித்தீர்கள் என்று, ரிசர்வ் வங்கியை கேள்வி கேட்டுள்ளது.

இதுபற்றி உரிய விளக்கம் அளிக்கும்படி கூறி, ரிசர்வ் வங்கி மற்றும் கூகுள் இந்தியா நிர்வாகத்திற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியுள்ளது. இதனால் கூகுள் பே நிறுவனம் தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.