ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்! 2 வருட தொடர் சிகிச்சை! பல மணி நேர ஆப்பரேசன்! இறுதியில்..?

டெல்லி: தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுக்கு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.


ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு, 2 ஆண்டுகள் முன்பாக, தலை ஒட்டிய நிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஜகா, பலியா எனப் பெயரிடப்பட்ட அந்த குழந்தைகளை பல இடங்களில் பரிசோதித்த மருத்துவர்கள் எதுவும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டனர்.

ஆனால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் இந்த குழந்தைகளை, நீண்ட அறுவை சிகிச்சை செய்து, போராடி தனியாகப் பிரித்தெடுத்துள்ளனர். தற்போது இருவரும் நலமுடன் உள்ளனர். அவர்களை பெற்றோருடன் ஒடிசாவிற்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளதாக, எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

இத்தகைய அறுவை சிகிச்சை மிக அரிய ஒன்று எனவும், கடந்த 50 ஆண்டுகளில் இதனைச் செய்த குழந்தைகளில் ஒருசிலர் மட்டுமே உயிருடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவர்கள் மேற்கொண்ட அரிய மருத்துவ சிகிச்சை 2 குழந்தைகளின் உயிரை காப்பாற்றியுள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தலை ஒட்டிப் பிறந்த குழந்தைகள் பிரிக்கப்படுவதற்காக நடைபெற்ற முதல் வெற்றிகரமான அறுவை சிகிச்சை இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.