சீட்டாட்டத்தில் நண்பர்களிடம் மனைவியை தோற்ற விபரீத கணவன்! பிறகு 4 பேர் சேர்ந்து அரங்கேற்றிய கேவலமான செயல்!

டெல்லி: மனைவியை வைத்து சூதாடிய நபருக்கு பல தரப்பிலும் கண்டனம் குவிந்து வருகிறது.


உத்தரப் பிரதேச மாநிலம், ஜஃபராபாத் பகுதியில் வசிக்கம் குறிப்பிட்ட நபர், தனது நண்பர்கள் 2 பேரை வீட்டுக்கே அழைத்து வந்து சூதாடுவது வழக்கமாகும். சமீபத்தில் ஒருநாள் அப்படி சூதாடும்போது அவரிடம் காசு தீர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

குடிபோதையில் இருந்த அவர், பணத்திற்குப் பதிலாக தனது மனைவியை அடமானம் வைத்து சூதாடுவதாக நண்பர்களிடம் கூறியுள்ளார். மேலும், தோல்வியடைந்தால், ''என் மனைவியை பலாத்காரம் செய்துகொள்ளுங்கள்,'' என்றும் அவர் தனது நண்பர்களுக்கு அனுமதி அளித்துள்ளார். 

இதன்படி சூதாட்டத்தில் அவர் தோற்கவே, அந்த நபர்களும் நண்பனின் மனைவி என்றும் பாராமல் அந்த பெண்ணை துரத்தி துரத்தி பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.

இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், தனது தாய்மாமன் வீட்டிற்குச் சென்று புகார் கூறியிருக்கிறார். இதுபற்றி அவர்கள் போலீசாரிடம் சென்று முறையிட்டபோது, அவர்கள் வழககுப் பதிவு செய்ய நிராகரித்துவிட்டனர்.

பின்னர், நீதிமன்றத்தில் முறையீடு செய்ததை தொடர்ந்து, இதன்மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது பலாத்காரம் செய்ததாக, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.