ராகுலை சமாதானப்படுத்திய சோனியா! வழக்குகளுடன் தயாராக இருக்கும் சிபிஐ! பரபரக்கும் டெல்லி அரசியல்!

ராஜினாமா செஞ்சா செஞ்சதுதான் என்று பிடிவாதமாக இருந்து, ராகுல் ஜெயித்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.


மீண்டும் கட்சிக்குள் வந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்புடன்தான் இன்று நடந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அனைவரும் வந்தார்கள். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்கள் 52 பேர் மற்றும் அதைவிட அதிக எண்ணிக்கையிலான காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த எண்ணிக்கையில் இன்னமும் மூன்று மட்டும் கூடியிருந்தால், எதிர்க் கட்சி என்ற அந்தஸ்தையாவது தொட்டிருக்கலாம் என்ற வருத்தம் ஒவ்வொரு காங்கிரஸ்காரர் முகத்திலும் தென்பட்டது. காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவரை தேர்வு செய்வதுதான் இந்தக் கூட்டத்தின் நோக்கம். ராகுல் இந்தப் பதவியை ஏற்பாரா? என்கிற விவாதங்களும் இருந்தன.

எனினும் சோனியா காந்தியே மீண்டும் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவராக இந்தக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தகவலை காங்கிரஸ் ஊடக தொடர்புக் குழுத் தலைவர் ரந்தீப் சிங் சர்ஜிவாலா, ட்விட்டரில் தெரிவித்தார். காங்கிரஸுக்கு வாக்களித்த 12 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அதில் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தியும் தனது டிவிட்டர் பக்கத்தில் சோனியாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அடுத்தகட்டமாக காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவரை சோனியா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மோடி மீண்டும் காங்கிரஸ் மீது சி.பி.ஐ. ஏவத் தொடங்கிவிட்டார் என்பது தெளிவாகத் தெரியவருகிறது.

சோனியா, ராகுல் மீதான அத்தனை கேஸ்களையும் விரைந்து எடுத்து விரட்டுமாறு அறிவுறுத்தி இருக்கிறாராம். இருவரும் கோர்ட்டுக்கும் வீட்டுக்கும்தான் அலையவேண்டும் என்பது மோடியின் திட்டமாம்.