டெல்லியில் அதிவேகத்தில் சென்ற கார் மின்கம்பத்தின் மீது மோதிய விபத்தில் ஒரு ஆணும் பெண்ணும் உயிரிழந்தனர் மேலும் இருவர் படுகாயமடைந்தனர்
காதலிக்கு கெத்து காட்ட அதிவேகம்! அந்தரத்தில் பறந்த ஹோண்டா சிட்டி! 2 பேருமே பலி! பதற வைக்கும் சிசிடிவி!

டெல்லி விவேக் விஹார் பகுதியில் இன்று காலை ஹோண்டா சிட்டி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சாலையில் போக்குவரத்து இல்லாததால் அந்த கார் அதிவேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் சாலைத் தடுப்புகளை மோதி தகர்த்துக்கொண்டு மின்கம்பம் ஒன்றின் மீது அதிவேகத்தில் மோதியது.
இதில் அந்த மின்கம்பம் பெயர்ந்து விழுந்தது. காரின் முன் புறம் முழுவதுமாக நசுங்கியது இந்த பயங்கர விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் பதற்றத்துடன் அருகில் ஓடிய போது காரில் இருந்த ஒரு இளைஞனும் ஒரு இளம் பெண்ணும் உயிரிழந்ததும் மேலும் இருவர் படுகாயங்களுடன் கிடந்ததும் தெரியவந்தது.
தகவல் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது டெல்லியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3 இளைஞர்களும் ஒரு இளம்பெண்ணும் அந்த காரில் வந்தது தெரியவந்தது. கேசவ், பிரப்ஜாத் சிங், அர்ஷ்ப்ரீத், மற்றும் இளம் பெண்ணான ரூபல் ஆகியோர் அந்த காரில் பயணம் செய்த நிலையில் பிரப்ஜாத் சிங்கும், ரூபலும் உயிரிழந்ததாக போலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மழை நேரம் ஆதலால் ஓட்டுநர்கள் கவனமாக செல்ல வேண்டும் என்ற காவல் துறையினரின் அறிவுரையை பலரும் கடைபிடிப்பதில்லை என போலீசார் கூறுகின்றனர். உடன் இருந்த காதலி ரூபலுக்கு கெத்து காட்ட ஓட்டுனர்ன காதலன் இப்படி ஒரு விபத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். https://www.youtube.com/watch?v=1ZMjNAowjVg