கடைசி 15 ரன்னில் 8 விக்கெட்! சன் ரைசர்ஸ் பரிதாப தோல்வி!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.


டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 45 ரன்களும், காலின் முன்றோ 40 ரன்க3ளையும் எடுத்து ஆட்டமிழந்தனர். கலீல் அஹ்மத் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை கைப்பற்றினார். புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். டேவிட் வார்னர் விளையாடி 51 ரன்களும் . பரிஸ்டோவ் 41 ரங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய அணைத்து வீரர்களும் டெல்லி அணியின் பந்து வீச்சை ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

ஒரு கட்டத்தில் 101 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில்  இருந்த சன் ரைசர்ஸ் அணி 116 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.கடைசி 15 ரன்களை சேர்பதற்குள் 8 விக்கெட்களை இழந்து சன் ரைசர்ஸ் அணி தோல்வியை தழுவியது. இதனால் டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியின் ரபடா 4 விக்கெட்களையும். கிறிஸ் மோரிஸ் , கீமா பால் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.