ஸ்டார்டிங் லாம் நல்லா தான் இருந்துச்சு! பினிஷிங் சரி இல்லயே! டெல்லி - சிஎஸ்கே மேட்ச் ரிப்போர்ட்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 148 ரன்களை இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.


டாஸ் வென்று பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிரிதிவி ஷா மற்றும் ஷிகர் தவான் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பிரிதிவி ஷா 24 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய  அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப்  பாண்ட் அதிரடியாக விளையாடி 25 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.ஒரு முனையில் ஷிகர் தவான் மட்டும் நிதானமாக விளையாடி 51 ரன்களை அடித்து டெல்லி அணி ஓரளவு நல்ல ஸ்கோரை எட்ட உதவினார்.

அந்த அணியின் மற்ற வீரர்கள் கடைசி 5 ஓவரில் ரன் குவிக்க முடியாமல் திணறினர். இதனால் அந்த அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 147 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. சென்னை அணியின் சார்பாக பிராவோ 3 விக்கெட்களை கைப்பற்றினார்.