ஆடைகளை கலைந்து கண்ட இடத்தில் டச்! உஸ்பெகிஸ்தான் பெண்ணுக்கு இந்தியாவில் விபரீத அனுபவம்!

புதுடெல்லியில் சிகிச்சை பெற்று வரும் தன் தங்கை மகளை பார்க்க வந்த வெளிநாட்டு பெண்ணை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.


இதையடுத்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் சுங்கத்துறை அதிகாரி 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் விமானம் மூலம் புதுடெல்லி வந்துள்ளார். அப்போது விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அப்பெண்ணிடம் விசாரணை நடத்துவது போல் கூறியுள்ளனர்.

பின்னர் ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் ஆனது கடந்த 3ஆம் தேதி அரங்கேறியுள்ளது. ஆடைகளை களையச் செய்து அந்த பெண்ணின் உடலில் கண்ட இடத்தில் தொட்டுள்ளனர். புதுடெல்லியில் இதய அறுவைச் சிகிச்சை பெற்றுவரும் தனது சகோதரியின் மகளை காண உஸ்பெகிஸ்தான் நாட்டிலிருந்து அப்பெண்ணின் சகோதரி வந்துள்ளார்.

அப்போது விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் பிரிவு சுங்க அதிகாரிகள் சோதனைக்காக அப்பெண்ணை பெண் ஊழியர்களின் துனை இல்லாமல் தனியே ஒரு அறைக்கு அழைத்துச் சென்று சுமார் அரை மணி நேரம் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அங்கிருந்த மேலதிகாரி ஒருவரிடம் அப்பெண் புகார் அளித்துள்ளார். 

இந்நிலையில் அந்த அதிகாரி புகாரை வாங்க மறுத்துள்ளார். அதிகாரிகள் மீது புகார் கொடுத்தால் உன் மீது போதைப் பொருள் கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விடுவோம் என மிரட்டியும் உள்ளனர். இதையடுத்து அப்பெண் மற்றொரு உயர் அதிகாரியிடம் புகார் அளித்தார்

இதையடுத்து புகாரின் பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள் சுங்கத்துறை அதிகாரிகள் மீது உள்ள கூட்டத்தை கண்டறிந்தனர். இதையடுத்து 2 நடத்தை கெட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுத்து இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.