காதல் கணவன், ஆசை குழந்தையை கொலை செய்தது ஏன்? தீபிகா பகீர் வாக்குமூலம்!

காதல் கணவனையும் ஆசை ஆசையாக பெற்றெடுத்த குழந்தையையும் கொலை செய்தது ஏன் என்று தீபிகா கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்துள்ளார்.


வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் ராஜா. அருகே உள்ள தாஜ்புரா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபிகா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ப்ரணீஷ் என்கிற பெயரில் ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

நேற்று இரவு காவல் நிலையம் சென்ற தீபிகா தனது கணவன் மற்றும் குழந்தையை காணவில்லை என்றும் கண்டுபிடித்து தருமாறு கோரியுள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் காலையில் வருமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து இன்று காலை மீண்டும் காவல் நிலையம் சென்ற தீபிகாவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் கணவனையும் தனது ஒரு வயது குழந்தையையும் அடித்துக் கொலை செய்து புதைத்து விட்டதாக கூறி போலீசாரை அதிர வைத்துள்ளார். இதனை எடுத்து கணவன் மற்றும் குழந்தையை புதைத்த விதத்தையும் காட்டி மிரள வைத்துள்ளார் தீபிகா. காதல் கணவனையும் ஆசை குழந்தையையும் கொலை செய்தது ஏன் என்று போலீசார் கேட்டபோது கண்ணீருடன் பதிலளித்துள்ளார் தீபிகா.

ராஜாவை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதாகவும் ஆனால் திருமணத்திற்குப் பிறகு ராஜாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது ஆகவும் தீபிகா தெரிவித்துள்ளார். தினமும் குடித்துவிட்டு வந்து தன்னிடம் தகராறு செய்ததாகவும் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவில்லை என்றும் தீபிகா கூறியுள்ளார். தினமும் குடித்துவிட்டு வந்த கணவனால் தனது வாழ்க்கையே சீரழிந்து விட்டதாக எண்ணி வேதனையில் இருந்ததாகவும் இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் போதையில் இருந்த கணவனை அடித்து கொலை செய்து விட்டதாகவும் கூறியுள்ளார் தீபிகா.

கொலைகாரி யின் மகன் என்கிற அவச்சொல் தனது குழந்தைக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக அவனையும் கொன்று விட்டதாகக் கூறி போலீசாரை அதிர வைத்துள்ளார். ஆனால் தனி ஒரு நபராக இரண்டு கொலைகளை செய்து உடலையும் வைத்திருக்க முடியாது என்று போலீஸார் கூறுகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் தீபிகாவிற்கு உதவியது யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் கணவனை ஆத்திரத்தில் கொலை செய்திருந்தால் உடனே காவல் நிலையத்தில் தீபிகா அடைந்திருக்கலாம். ஆனால் குழந்தையையும் கொலை செய்து விட்டு இருவரும் மாயமாகி விட்டதாக தீபிகா நாடகமாடி இதில் ஏதோ மர்மம் இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.