தீபாவுக்கு அரசியல் புரிஞ்சிடுச்சு! ஆனா, கமல்ஹாசனுக்கு இன்னமும் புரியலையே! என்னாச்சு தெரியுமா?

தமிழக மக்களுடைய நெஞ்சை உடைக்கும் வகையில் திடீரென தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக தீபா அறிவித்தார்.


அந்த அறிவிப்பைக் கேட்டு தமிழகம் ஸ்தம்பிக்காதது மட்டும்தான் குறை. ஆனால், அந்த அறிவிப்புக்கும் பல நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், இப்போதைக்கு பேரவையை நான் கலைக்கவில்லை என்று ஆறுதல் தெரிவித்து அனுப்பி வைத்திருக்கிறார். இந்த நிலையில் தீபாவுக்குப் புரிஞ்சதுகூட கமல்ஹாசனுக்கு இன்னமும் புரியலை என்று டென்ஷனுடன் பேசினார். ‘‘நாற்காலியை பிடித்து விடலாம் என்ற பதவி ஆசையில் இன்று பலரும் அரசியலில் இறங்குகின்றனர். எவ்வித அரசியல் பின்புலம் இன்றி, எவ்வித கொள்கைப்பிடிப்பும் இன்றி நேரடியாக அமெரிக்க மாப்பிள்ளை என்பது போல 

முதலமைச்சர் பதவியை குறி வைத்து ஓட்டு அரசியலில் குதிக்கிறார்கள். ஒரு தேர்தலில் தோல்வி கண்டாலே கனவு கருகிப்போய் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள். சிலருக்கு சின்னதாக மக்கள் ஆதரவு கிடைத்தால்கூட தொடர்ந்து அரசியல் நடத்த மனமும் பணமுமின்றி தவிக்கிறார்கள். சிலருக்கு மக்கள் எதிர்க்கட்சி அந்தஸ்து தந்தால் கூட ஒருவித மனக்கசப்பினால் மெல்ல மெல்ல அரசியல் நடவடிக்கையில் இருந்து விலகி 

ஏதாவது ஒரு கட்சியோடு தன் கட்சியை இணைத்து விட்டு காணாமல் போய்விடுகிறார்கள். வைகோ, விஜயகாந்த் போன்றவர்கள் பெரிதாக சாதிப்பார்கள் என்று ஏமாந்துபோய்  கமல்ஹாசன் கட்சியில் சேர்ந்தோம். ஆனால், இங்கேயும் கட்சியில் யாருக்கும் பிடிப்பு இல்லை. இப்போது முழுக்க முழுக்க ஏதோ ஒரு கம்பெனியை நம்பி அரசியல் செய்கிறார்கள். 

பிரசாந்த் கிஷோர் நல்ல அறிவாளியாகவே இருக்கலாம் ஆனால், தமிழ் மண் மற்ற மாநிலங்களில் இருந்து மாறுபட்டது என்ற உண்மையை கமல் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மக்களோடு மக்களாக நில்லாத வரையில் மரியாதையும் வாக்கும் கிடைக்காது. அதனால் கமல் உண்மையைப் புரிந்துகொண்டு, முழு நேர அரசியல்வாதியாக மாற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் கட்சி மாற வேண்டியதுதான் என்கிறார்கள்.

கமல்ஹாசனுக்கு இப்படியொரு சோதனையா?