பேபிம்மா அ.தி.மு.க.வுல சேர்ந்தாச்சா? இனிமே தி.மு.க.வுக்கு மரண அடிதான், மோதிப் பாருங்களே...

தீபா பேரவை மூலம் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியே தீருவேன் என்று அடம் பிடித்துவந்த தீபா, இப்போது அ.தி.மு.க.வை காப்பாற்றும் உன்னத பணியில் இறங்கியே விட்டார். இந்த விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்தார் தீபா.


தியாகராஜநகரில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, ‘‘எனது உடல்நிலை காரணத்தினால் அரசியலை விட்டு விலகுவதாக அறிவிதிருந்தேன். இந்த இயக்கத்தை பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும்  எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தாய்க்கழகமான அதிமுகவுடன் இணைகிறது. 

சேலம் பொதுக்கூட்டத்தின் போது மாதவனின் இயக்கம், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையுடன் இணைக்கப்பட்டது. தனக்குப்பின் அதிமுக நிலைக்க வேண்டும் என்ற ஜெவின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாகவே அதிகமுகவுடன் இணைகிறோம். பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைதேர்தல்களில் எங்கள் பேரவை அளித்த ஆதரவை அதிகமுக நிர்வாகிகளே தெரிவித்துள்ளனர்.

போயஸ் கார்டன் வீடு எனக்கு சொந்தம் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. சட்டரீதியாக சொத்தை மீட்பேன்.  சொத்தை மீட்டபின் ட்ரஸ்ட் ஆரம்பித்து மக்களுக்கு உதவுவேன். அதிமுகவில் எந்த பொறுப்பையும் நான் கேட்கவில்லை. நிபந்தனையற்ற ஆதரவுடனே இணைகிறோம். இன்று தான் கடிதம் கொடுத்திருக்கிறோம். அதிமுக தலைவர்களின் முடிவுகளை எதிர்பார்த்திருக்கிறோம் என்று தெரிவித்து இருக்கிறார்.

ஜெயா சொத்துக்களை எப்படியும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இப்போது அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி இருப்பதாக கருதப்படுகிறது. எப்படியோ அ.தி.மு.க.வுக்கு பலம் கூடிப்போச்சு. இனிமே தி.மு.க.வுக்கு கிலிதான்.