அமைச்சர் குடும்ப பெண்கள் 2 பேர் மர்ம மரணம்! வீட்டிற்குள் சடலமாக கிடந்தனர்! அதிர வைக்கும் சம்பவம்!

மேற்கு வங்க சட்ட அமைச்சர் மோலாய் கடக் குடும்ப உறுப்பினர்களான வயதான பெண் மற்றும் மகள் உடல்கள் அசன்சில் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன


அசன்சில் பகுதியில் உள்ள  வீட்டில்  துர்நாற்றம் வருவதை அடுத்து சந்தேகமடைந்து  அக்கம் பக்கத்தினர் புகாரளித்த பின்பு போலீசார் வீட்டினுள் சென்ற போது,அடையாளம் தெரியாத ஒரு தாய் மற்றும் மகளின் உடலை கைப்பற்றினர், பின்னர் சில அடையாளங்கள் மூலம் அவை ஜெயஸ்ரீ கடக் மற்றும் அவரது மகள் நிலாம் கடக் என தெரிய வந்துள்ளது.

ஜெயஸ்ரீ கடக், அமைச்சரின் அண்ணன் மனைவி எனவும் உறுதியாகியுள்ள நிலையில் இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஒப்படைக்கபடவுள்ளது. இது கொலையா அல்லது எதர்ச்சியாக இறந்தனரா எனவும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

முன்னதாக அமைச்சரின் அண்ணணும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது!