உயிருக்கு போராடிய தந்தை! தன் உறுப்பில் ஒரு பாதியை தானமாக கொடுத்து காப்பாற்றிய மகள்! பிறகு இருவரும் நேருக்கு நேர் சந்தித்த நெகிழ்ச்சி தருணம்!

நியூயார்க்: தந்தைக்கு கல்லீரல் தானம் கொடுத்து, உயிரை காப்பாற்றிய மகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.


நியூயார்க்கைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் பர்ஜ். 62 வயதான இவருக்கு, கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட்டு கடும் அவதிக்கு ஆளானார். இதன்படி, உயிருக்குப் போராடி வந்த ரிச்சர்டிற்கு, கல்லீரல் உறுப்பு மாற்று தானம் செய்ய தேவை ஏற்பட்டது. இதனை அவரது மகள் டிஃபானி நாப் ஏற்றுக் கொண்டார்.

தந்தையை காப்பாற்ற தனது கல்லீரலில் ஒரு பகுதியை தானமாக அளிக்க, டிஃபானி முன்வந்தார். இன்படி, இருவருக்கும் திட்டமிட்டபடி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வெற்றிகரமாக கல்லீரல் மாற்றப்பட்டது. இருவருமே உடல்நலம் தேறியுள்ளனர்.  

இதையடுத்து, சுய நினைவு திரும்பிய இருவரையும் மருத்துவர்கள் ஒன்றாக சந்திக்க வைத்தனர். இருவரும் நெகிழ்ச்சியாக, கட்டித் தழுவிக் கொண்டனர். அமெரிக்காவில் மட்டும் 16000 பேர் கல்லீரல் பாதிப்புடன் மாற்று உறுப்புக்காக காத்திருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு வெறும் 6000 கல்லீரல் தான உறுப்புகள் மட்டுமே உள்ளன. இத்தகைய சவாலான சூழலில்தான், ரிச்சர்டை காப்பாற்ற அவரது மகளே கல்லீரல் தானம் அளித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.