திடீரென உயிரிழந்த மகள்..! சடலத்தை வீட்டுக்குள் வைத்து தந்தை செய்த செயல்! அதிர வைக்கும் சம்பவம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இறந்த குழந்தையின் சடலத்திற்கு மீண்டும் உயிர் வரும் என நம்பி குழந்தையின் சடலத்தை மூன்று நாட்களாக வீட்டில் வைத்து பூஜை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரபிரதேச மாநிலத்தில் மவு மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் வன்வாசி, இந்த தம்பதியினருக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது மகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டது .இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி கடந்த 14ம் தேதி மகள் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து அவரது பெற்றோர்கள் குழந்தைக்கு இறுதி சடங்கு செய்து குழந்தையை புதைக்காமல் அவர்களது வீட்டிலேயே வைத்து குழந்தைக்கு மீண்டும் உயிர் வரும் என நம்பி பிரார்த்தனை செய்து வந்துள்ளனர். இதற்கு அவரது உறவினர்களும் உடந்தையாக இருந்துள்ளனர் .இந்நிலையில் அந்த ஊர் மக்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அரவிந்த் வீட்டில் குழந்தையின் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் அவர்களது வீட்டின் அருகில் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதையடுத்து இதுகுறித்து உடனே ஒரு பொதுமக்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களது குடும்பத்தாரிடம் பேசிப்புரியவைத்து குழந்தையின் சடலத்தை புதைக்க ஏற்பாடு செய்தனர்.

மேலும் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. மேலும் காவல்துறை விசாரணையில் அரவிந்த் மற்றும் அவரது குடும்பத்தார் கடவுள் நம்பிக்கையில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளதால் இந்த மாதிரியான செயலில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.