வேலூரில் மீண்டும் கொட்டப் போகுது பண மழை! எப்போது முதல் தெரியுமா?

தமிழ்நாடு முழுவதும் கடந்த தேர்தலில் ஆளும் கட்சி பணத்தை அள்ளி வீசியது.


ஆளும் கட்சி ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுக்க, தி.மு.க.வும் அதே அளவு பணம் கொடுத்தது. அதேநேரம், தினகரனின் கட்சியும் ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுத்தது. ஆனால், தேர்தல் கமிஷன் கண்ணுக்கு என்னவோ, வேலூர் தொகுதி மட்டும்தான் கண்ணில் பட்டது. அதனால், அந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு தேர்தல் முடிவுகள் வந்து கன்னாபின்னாவென்று தி.மு.க. வெற்றி பெற்றுவிட்டது. இந்த சூழலில் மீண்டும் வேலூரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆம், ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடத்துவது என்ரும், 9ம் தேதி வாக்கு எண்ணிக்கை என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தி.மு.க.வில் துரைமுருகன் மகன் துரை ஆனந்தும், அ.தி.மு.க. சார்பில் கூட்டணியில் ஏ.சி.சண்முகம் ஆகிய இருவருமே மீண்டும் கோதாவில் குதிப்பார்கள் என்பது உறுதியாகியுள்ளது. இப்போது, இந்த சீட்டை காங்கிரஸ் கட்சிக்குத் தரவேண்டும் என்று சில காங்கிரஸ் பிரமுகர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

அதேநேரம், ஏ.சி.சண்முகம் ஜெயித்தாலும் அவர் அ.தி.மு.க. கணக்கில் வர மாட்டார் என்பதால், இவருக்கு வேலை செய்வது குறித்தே அ.தி.மு.க. யோசிக்கும் என்று சொல்கிறார்கள். ஆக, துரைமுருகன் மகனுக்கு ஜாலியோ ஜாலிதான்.