தைப் பொங்கலுக்கு ரஜினிகாந்தின் தர்பார்! சென்னை திரும்பிய ரஜினி அறிவிப்பு!

தர்பார் படம் ஜனவரி 14ந் தேதி வெளியாகும் நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார் ..


ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் , சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ,அல்லிராஜா சுபாஷ்கரணின் லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது . அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் .ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பினை செய்து வருகிறார் .

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் நாள் இப்படத்தின் அறிமுக போஸ்டர் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் சினிமா படப்படிப்பில் கலந்துக் கொண்டு இரவு 11 மணிக்கு விமானம் முலம் சென்னை வந்தார். 

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில், ரசிகர்கள் குளங்களை தூர் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.  மேலும் தர்பார் படம் நன்றாக  வந்திருக்கிறது. ஜனவரி  14ந் தேதி வருகிற பொங்கலுக்கு  தர்பார் திரைப்படம் வெளியாகும் என்று  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார் .