ரஜினியின் தர்பார் படப்பிடிப்பில் கல்லூரி மாணவர்கள் கல்வீச்சு! முருகதாஸ் செயலால் விபரீதம்!

தர்பார் படப்பிடிப்பு குழு மீது கல்லூரி மாணவர்கள் கற்களை வீசி தாக்கியதல் பரபரப்பு ஏற்பட்டது.


முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் மும்பையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் என்று படமாக்கப்பட்டது. ரஜினி வந்திருப்பதை அறிந்த மாணவர்கள் ஏராளமானோர் படப்பிடிப்பை காண திரண்டிருந்தனர்.

ஆனால் மாணவர்களின் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் ரஜினியை தற்போதைக்கு வரவேண்டாம் என்று ஏ ஆர் முருகதாஸ் கூறியுள்ளார். மேலும் மாணவர்களையும் கலைந்து செல்லுமாறும் முருகதாஸ் மற்றும் உதவி இயக்குனர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் ரஜினியை பார்க்காமல் செல்லமாட்டோம் என்று மாணவர்கள் அடம் பிடித்தனர்.

இதனால் கடுப்பான முருகதாஸ் உடனடியாக கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் மீது புகார் அளித்துள்ளார். ஏற்கனவே தர்பார் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி வருவதாகவும் மாணவர்கள் இவ்வளவு வேலை அனுமதித்தால் ஏராளமான காட்சிகள் வெளியாகி விடும் என்று கூறி அவர்களை அப்புறப்படுத்துமாறு முருகதாஸ் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து கல்லூரி நிர்வாகமும் மாணவர்களை படப்பிடிப்புக்கு தொந்தரவு செய்யாமல் கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சிலர் படப்பிடிப்புக் குழுவினரின் கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முருகதாஸ் உள்ளிட்டோர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தங்களுடைய ஹோட்டல்களுக்கு திரும்பியுள்ளனர்.