கடற்கரையில் 2 ஆண்களுடன் நடிகை தன்ஷிகா செய்த செயல்! வீடியோ செம் வைரல்!

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் நடிகை தன்ஷிகாவும் ஒருவர். இவர் பல அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொணடவர்.


திரையுலகிற்கு அறிமுகமான  முதல் படமான  பேராண்மை திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்து தமிழ்த் திரைப்பட உலகில் பிரபலமானார். நடித்த முதல் திரைப்படமே வெற்றி படமாக இவருக்கு அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு பின் இவர் நடித்த, வசந்த பாலனின் ஆரவன், பாலாவின் பரதேசி ஆகிய படங்கள் இவருக்கு பெரும் வெற்றியை தேடி தந்தன. இதனை அடுத்து சூப்பர் ஸ்டாரின் மகளாக நடித்த கபாலி திரைப்படம், தமிழ் திரை உலகின்  இவருக்கு ஒரு திருப்பு முனை என்றே கூற வேண்டும்.

மிகக் குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பின் மூலம் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தனக்கென உருவாக்கியுள்ளார் நடிகை தன்ஷிகா.

தற்போது இவர் தனக்கு தேவையான கதாபாத்திரங்களை மிகவும் ஆராய்ந்து பொறுமையாக தேர்ந்து எடுக்கிறார். பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கே அதிக முன்னுரிமை அளிப்பதாக கூறியுள்ள நடிகை தன்ஷிகா. 

அப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தில் தான் தற்போது இவர் நடித்து வருகிறார்.  அதற்கான தீவிர பயிற்சியையும் சரியான முறையில் மேற்கொண்டு ஈடுபட்டு வருகிறார். 

பைரோடெக்னீக்ஸ் முறைகளை அழகாக பயின்று வரும் இவர், அந்த விடீயோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.  கடற்கரையோரம் நின்றபடி இரண்டு பேரின் உதவியுடன் தன்னுடைய பயிற்சியை மேற்கொள்ளும் விதமாக உள்ளது அந்த  வீடியோ காட்சி.

" நான் ஒரு பெண், எனக்கு தெரியும் நான் இதுவரை எவ்வளவு தூரத்தை கடந்து வந்துளேன் என்று, ஒவ்வொரு முறையும் என்னால் முடியாத வற்றையும் செய்வதற்காக மிகவும் கடுமையாக உழைக்கிறேன்" என்று கேப்சனும் வெளியிட்டு இருந்தார் நடிகை தன்ஷிகா.

இந்த வீடியோ வெளியான சிலமணி நேரத்திலேயே இணையத்தில் வைரலாக பரவியது.  தன்ஷிகாவின் இந்த முயற்சியை பாராட்டி நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.

இவர் தற்போது, சமுத்ரகனி இயக்கத்தில் வெளியாக உள்ள "கிட்னா". "யோகிதா", "வாலு ராஜா" மற்றும்   "இருட்டு" போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். https://twitter.com/SaiDhanshika/status/1137565446507356161