பன்னீர் பதவிக்கு ஆபத்து! செல்லப்பா, ராஜேந்திரனை வைத்து எடப்பாடி ஆடும் கேம்!

அம்மா அடையாளம் காட்டிய நபர்தான் ஒற்றைத் தலைவராக அ.தி.மு.க.வில் இருக்க வேண்டும் என்று ராஜன் செல்லப்பா பேசியதைப் பார்த்ததும், அவர் பன்னீருக்கு ஆதரவாக எப்படி குரல் எழுப்புகிறார் என்று பலரும் யோசித்தார்கள்.


இப்போதுதான், அது எடப்பாடியின் பாலிடிக்ஸ் கேம் என்று தெரியவந்துள்ளது. ராஜன் செல்லப்பா பேசியதையடுத்து குன்னம் ராஜேந்திரன் இன்று ஒரு செல்ஃபி வீடியோ வெளியிட்டார். அதில், ‘’அ.தி.மு.க.விற்கு  ஒற்றை தலைமை வேண்டும் என்று  ராஜன் செல்லப்பா கூறிய கருத்தை ஆமோதிக்கிறேன்.

ஆனால், அந்தத் தலைமை வலிமையான, சுயநலமற்ற தலைமையாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்களது குடும்பத்தை ஒதுக்கிவைத்து விட்டு கழகமே குடும்பம் வாழ்ந்து மறைந்தார்கள்.

ஆனால்,  தனது குடும்பத்திற்காக கழகத்தை வளைக்க நினைப்பது எங்களுக்கு வேதனையளிக்கிறது” என்று கூறியிருந்தார். அவர் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தைத்தான் கூறுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்துபோனது. மேலும், இவர் மத்திய அமைச்சர் பதவி கேட்டு ஒற்றைக்காலில் நின்ற வைத்தியலிங்கத்தின் ஆதரவாளர் என்பதாலே, அத்தனை குட்டும் வெளிப்பட்டது.

தன்னுடைய மகனுக்குக் கிடைக்கவேண்டிய பதவியை இ.பி.எஸ். கெடுத்துவிட்டார் என்பதை நன்கு உணர்ந்துகொண்டார் பன்னீர். அதனால் இப்போது ஆட்சியைவிட கட்சி முக்கியம் என்பதால், துணை முதல்வர் பதவியைக் கொடுத்து கட்சியைக் கைப்பற்ற திட்டம் போட்டார். 

ஆனால், இ.பி.எஸ். இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எந்தக் காரணம் கொண்டும் கட்சியை விட்டுத்தர முடியாது என்று ஒற்றைக்காலில் நின்றார். இந்த நிலைமையில்தான் பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து தன்னை காலிசெய்ய பன்னீர் முயற்சி செய்கிறார் என்பது எடப்பாடிக்கு தெரியவந்தது. அதற்குள் அவரை கட்சியில் இருந்து கட்டம் கட்டிவிட முயற்சி செய்கிறார் எடப்பாடி.

அதனாலே இப்போது ராஜன் செல்லப்பா, ராமச்சந்திரன் ஆகியோர் எதிர்ப்புக் குரல் கொடுக்கிறார்கள். 12ம் தேதி கூட்டத்தில் பன்னீரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள முயற்சி எடுக்கப்படும் என்கிறார்கள்.
எடப்பாடியார் ஆட்டம் எப்படிப் போகிறது என்று பார்க்கலாம்.