பாஜகவில் இணைந்தார் ரெக்கார்ட் டான்ஸ் புகழ் சப்னா! தொண்டர்கள் உற்சாகம்!

டெல்லி: ஹரியானாவைச் சேர்ந்த டான்ஸர் சப்னா சவுத்ரி, பாஜக.,வில் இணைந்துள்ளார்.


சப்னா சவுத்ரி, கிளுகிளுப்பான ஆல்பங்களை பாடி, சமூக ஊடகங்களில் பதிவேற்றுவது வழக்கமாகும். இவருக்கு ஆன்லைன் மட்டுமின்றி வட இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், சமீப காலமாக, இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதை தவிர்க்கும் வகையில், தன்னை பாஜக.,வில் இணைத்துக் கொண்டுள்ளார். 

டெல்லியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை பாஜக மேற்கொண்டுள்ளது. இதன்படி, மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி உள்ளிட்டோர் பங்கேற்ற உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வில் திடீரென நுழைந்த சப்னா சவுத்ரி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்துகொண்டார்.

தங்களது கட்சிக்கு ஒரு கவர்ச்சி நட்சத்திரம் கிடைத்தது பாஜக.,வினரை உற்சாகமடைய செய்துள்ளது. இதற்கு முன்பாக, அவர் காங்கிரஸில் சேர்வார் என்றும், பாஜக.,வில் சேர்வார் என்றும் தகவல்கள் கூறப்பட்டன. ஆனால், இவற்றை சப்னா சவுத்ரி மறுத்து வந்தார்.

அவர் மக்களவை தேர்தலில், மனோஜ் திவாரியை எதிர்த்தே பிரசாரம்கூட செய்தார். இந்நிலையில்,  மனோஜ் திவாரி முன்னிலையில் பாஜக.,வில் சப்னா சேர்ந்த விசயம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.