சினிமா வாய்ப்பு கேட்டு சென்ற மாணவி! மேடையில் ரெக்கார்ட் டான்ஸ் ஆட வைத்த காதலன்!

கன்னியாகுமரி: சினிமா ஆசை காட்டி பள்ளி மாணவியை பலமுறை பலாத்காரம் செய்துவந்த கொடூரனை போலீசார் கைது செய்தனர்.


கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை அடுத்த முளகுமோடு பகுதியை சேர்ந்தவர் ஜான் பிலிப்போஸ். இவர்,  அதே பகுதியில் தீபம் தியேட்டர்ஸ் என்ற நடனக்குழுவை நடத்தி வருகிறார். இவரது உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் அபி அஜித்குமார். நடன ஆசிரியராகவும் வேலை செய்யும் இந்த நபருக்கு, ஏற்கனவே திருமணமாகி, 7 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். 

இந்நிலையில், தன்னிடம் நடனப் பயிற்சிக்காக வந்த பள்ளி மாணவி ஒருவரிடம் அஜித்குமார் நெருங்கிப் பழகியுள்ளார். மாணவியின் அழகில் மயங்கிய அஜித்குமார், சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருகிறேன் எனக் கூறி, மாணவியை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். 2018 அக்டோபர் மாதம், ஒருநாள், சினிமா துணை இயக்குனர்களிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன் எனக் கூறி, காயல்பட்டணம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு, அஜித்குமார் அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே, மாணவியை, அஜித்தும், அவரது நண்பரும் பலாத்காரம் செய்துள்ளனர். 

ஆனாலும், நடிப்பு சரியாக வரவில்லை எனக் கூறி, மீண்டும் தனது நடனப் பள்ளிக்கு மாணவியை அழைத்து வந்த அஜித், தன்னுடன் பணிபுரியும் சக கலைஞர்களுக்கு, மாணவியை விருந்தாக்கியுள்ளான். சுமார்  ஓராண்டாக, பள்ளி மாணவியை இவர்கள் மாறி மாறி பலாத்காரம் செய்து, கிட்டத்தட்ட பாலியல் தொழிலாளி போல மாற்றிவிட்டனர். மாணவியை நீண்ட நாளாக காணவில்லை என, அவரது பெற்றோர் போலீசில் புகார் தரவே, அஜித்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது செல்ஃபோன் சிக்னலை ஆய்வு செய்த போலீசார், அஜித் செய்த தில்லாலங்கடி விசயத்தை கண்டுபிடித்தனர். உடனே அவரை கைது செய்ததுடன், சிறுமியையும் மீட்டனர்.