தமிழக பா.ஜ.க.வில் திடீர் திருப்பம்..! தலித் சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகன் தலைவர்..!

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக சென்ற பின். கடந்த சில மாதங்களாக தமிழக பாஜக தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்தது. தமிழக பாஜக தலைவர் பதவியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன். காயத்ரி ரகுராம். வானதி சீனிவாசன் மற்றும் ராஜா போன்றவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்தனர்.


இதன் காரணமாக தமிழக அரசியலில் பிரபலமாகும் நோக்கத்தோடு எச். ராஜா திராவிட கட்சிகளையும். காயத்ரி ரகுராம் சாதி கட்சிகளையும் விமர்சிக்க ஆரம்பித்தனர். வானதி சீனிவாசன் தமிழிலக்கிய நண்பர்களோடு இணைந்து மாநிலம் முழுவதும் பல கூட்டங்களை நடத்தி தனக்கு வலுவான ஆதரவாளர்களை சேர்த்து வந்தார்.

பாரதிய ஜனதா தலைவர் பதவிக்கு கடும் போட்டிகள் இருந்து வந்த இந்த வேளையில். தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணியாற்றி வரும் எல்.முருகன் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள அறிவிப்பு. ஒட்டுமொத்த தமிழக தலைவர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எப்படியாவது ரஜினிகாந்தை பாஜகவில் இணைத்து அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலைக் களம் காண ஆடிட்டர் குருமூர்த்தி. மாலன் நாராயணன். ரங்கராஜ்பாண்டே போன்றவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்ற இந்த வேலையில்.

மத்திய அரசு பணியில் உள்ள அரசு ஊழியர் ஒருவரை தமிழக பாஜக தலைவராக அறிவித்து இருப்பது. அதன் தொண்டர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மணியன் கலியமூர்த்தி