கபில்தேவின் சாதனையை முறியடித்த டேல் ஸ்டெய்ன்!

தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.


இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டேல் ஸ்டெய்ன் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலமாக இவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார்.

கபில் தேவ் 131 டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலமாக இவர் 92 டெஸ்ட் போட்டிகளில் 437 விக்கெட்களை வீழ்த்தி கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும் இவர் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 7வது இடத்தில உள்ளார். இதனால் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர் பட்டியலில் 8 வது இடத்திற்கு கபில் தேவ் பின்தள்ளப்பட்டுள்ளார்.

800 விக்கெட்களை வீழ்த்திய இலங்கை அணியின் முரளிதரன் முதலிடத்தில் உள்ளார்.ஆஸ்திரேலியாவின் ஷான் வார்னே 708 விக்கெட்களை வீழ்த்தி இரண்டாம் இடத்தில உள்ளார்.இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர் அணில் கும்ப்ளே 619 விக்கெட்களை வீழ்த்தி 3 வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.