தினமும் ஒரு முறையாவது மாரடைப்பு..! ஆனாலும் உயிருடன் இருக்கும் சிறுவன்! டாக்டர்களையே மிரள வைத்த சம்பவம்!

டெக்சாஸ்: இதய நோயுடன் 14 ஆண்டுகளாக உயிர் வாழும் சிறுவனை கண்டு மருத்துவர்கள் வியப்படைந்துள்ளனர்.


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஏஞ்சலோ பகுதியை சேர்ந்தவன் ஜான் தாமஸ். 14 வயதான தாமஸ்க்கு, பிறவியிலேயே இதய நோய் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுபற்றி வெளியில் சொல்லாமலேயே அந்த சிறுவனின் பெற்றோர் இருந்துள்ளனர். இந்நிலையில் தாமஸ் மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது அவனுக்கு உள்ள பாதிப்பு பற்றி வெளியில் தெரியவந்தது.

இதன்படி, அவனுக்கு ALCAPA எனும் அரிய வகை இதய நோய் உள்ளதாகவும், இந்த பாதிப்பு உள்ளவர்கள் ஒரு வயதுக்கு மேல் உயிர் வாழ்வதே அபூர்வம் எனும் நிலையில் தாமஸ் 14 வயதை கடந்துள்ளது வியப்பு அளிக்கிறது என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.  

இந்த அரிய வகை இதய நோய் பாதித்தவர்களின் இதயத்தில் ரத்தம் மற்றும் ஆக்சிஜன் குறைபாடு நிலவும் என்பதால், தினசரி மாரடைப்பு நிகழும். எனினும், தாமஸ் இவற்றை எல்லாம் கடந்து உயிர் வாழ்வதால் வியப்படைந்த மருத்துவர்கள் உடனடியாக சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய தீர்மானித்தனர். இதன்பேரில் கடந்த செப்டம்பர் மாதம் அவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்சமயம் தாமஸ் உடல்நலம் தேறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.