கன்னி கழியாத எனது மகளை திருமணம் செய்தால் ரூ.2 கோடி பரிசு! கோடீஸ்வர தந்தை விநோத அறிவிப்பு!

கன்னி கழியாத தனது மகளை திருமணம் செய்தால் ரூ.2 கோடி தருவதாக, தந்தை ஒருவர் அறிவித்துள்ளார்.


தாய்லாந்து நாட்டின் தெற்கே உள்ள சம்புவான் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆர்னன் ரோட்தாங். பெரும் செல்வந்தரான இவருக்கு, 26 வயதான மகள் ஒருவர் உள்ளார். இதுவரை கன்னி கழியாமல் உள்ள தனது மகளுக்கு, திருமணம் செய்து வைப்பதற்காக, ஆர்னன் ரோட்தாங் பலவித முயற்சிகளை செய்திருக்கிறார். 

ஆனால், அவர் ஏற்பாடு செய்யும் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எனக் கூறி, ஒவ்வொரு முறையும் அவரது மகள் கர்னிஸ்தா திருமணத்தை தட்டிக் கழித்து வந்துள்ளார். இதனால், விரக்தி அடைந்த ஆர்னன், தனது மகளை திருமணம் செய்வோருக்கு ரூ.2 கோடி பரிசு தருவதாக அறிவித்துள்ளார். 

இதுபற்றி ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது. நன்கு படித்தவர் என்பதைவிட, தனது துரியன் பழ சாகுபடி தொழிலை ஏற்று திறம்பட நடத்தக்கூடிய ஒரு உழைப்பாளி மட்டுமே மாப்பிள்ளையாக வரவேண்டும் என, ஆர்னன் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி பற்றி கேள்விப்பட்ட அவரது மகளும், எனக்கு இது வேடிக்கையாக உள்ளது. இருந்தாலும், எனக்கு பிடித்தமானவராக இருந்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்வேன், என்று தெரிவித்துள்ளார். 

கன்னி கழியாத மகளுக்கு ரூ.2 கோடி பரிசு தருவதாக பெற்ற தந்தையே அறிவித்துள்ள சம்பவம் தாய்லாந்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏராளமான இளைஞர்கள் கர்னிஸ்தாவை தேடி அவர் வீடு முன் குவிந்து வருகின்றனர்.