சின்னாபின்னமாகப்போகிறது நாகை! தீவிர புயலாக நெருங்கும் கஜா!

வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் கஜா தீவிர புயலாகவே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் நாகையில் பலத்த சேதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.


வங்க கடலில் நிலைகொண்டு கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தை நோக்கி கஜா புயல் நகர்ந்து வருகிறது. முதலில் தென்மாவட்டத்தை தாக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் பின்னர் கடலூரில் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் நெருங்க நெருங்க தனது பாதையை மாற்றிக் கொண்டு நாகையை நோக்கி முன்னேறி வருகிறது.

 

   புயல் தீவிர புயலாக மாறியதை தொடர்ந்து நாகையில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடந்த 1972ம் ஆண்டுக்கு பிறகு நாகையில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது இதுவே முதல் முறையாகும். மேலும் பத்தாம் எண் புயல் கூண்டு என்பது அதி தீவிர புயல் வருவதை குறிப்பதாகவும். அதி தீவிர புயல் என்றால் மணிக்கு 120 கிலோ மீட்டருக்கு மேல் கூட காற்று வீசும்.

 

   அதே சமயம் புயல் கரையை கடக்கும் போது வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதாவது கடலில் தீவிர புயலாக இருந்தாலும் கரைக்கு வரும் போது வலுவிழந்து வெறும் புயலாகவே கரையை கடக்கும் என்று வானிலை மையம் கூறி வந்தது. ஆனால் புயல் கரையை நெருங்கும் போதும் தீவிரமாகவே நெருங்கி வருகிறது. இதனால் நாகை அருகே தீவிர புயலாகவே கஜா கரையை கடக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

 

  தீவிர புயலாக கரையை கடக்கும் பட்சத்தில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டும். சூறாவளி காற்றை கூட எதிர்பார்க்கலாம். எனவே புயல் கரையை கடக்க உள்ள நாகை பகுதிகள் பலத்த சேதம் அடையும் என்று அஞ்சப்படுகிறது.