கஷ்டமில்லா உடற்பயிற்சி சைக்ளிங் செய்தால் உடலெடை குறைந்து மனபலம் அதிகரிக்கும்!

உடற்பயிற்சி நிபுணர்களின் கூற்றுப்படி, சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் நலம் பயக்கிறது. சுவாரசியமான, அதிக கஷ்டமில்லாத உடற்பயிற்சியாக இருக்கிறது.


சைக்கிள் ஓட்டம், மனஅழுத்தம், படபடப்பைக் குறைக்கிறது. பிற உடற்பயிற்சி சாதனங்களுடன் ஒப்பிடும்போது இதில் காயமடையும் வாய்ப்பும் குறைவாக இருக்கிறது. உடம்பின் கீழ்ப்பகுதி தசைகளை வலுப்படுத்துகிறது. 

நமது ஒட்டுமொத்த சக்தியையும் வலுவையும் அதிகரிக் கிறது. உடம்பின் சீர்நிலை, ஒருங்கிணைக்கும் திறனை மேம்படுத்து கிறது. மனஅழுத்தத்தைத் துரத்த உதவுகிறது. 

நமது உயிர்க் கடிகாரத்தைப் பராமரிப்பதன்மூலம் நல்ல தூக்கத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது. மனஅழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோனாகிய ‘கார்ட்டி சோலின்’ அளவைக் குறைக்கிறது.  உடல் பருமனுக்குத் தடை போடுகிறது.  மூட்டு பிரச்னைகள் ஏற்படாமல் காக்கிறது.