சைக்கிள் டயருக்கு காற்று அடிக்க 2 ரூபாய் தரமறுத்த நபர்..! பதிலுக்கு உயிரையே எடுத்த கொடூரம்! பதைபதைப்பு சம்பவம்!

ஆந்திராவில் மதுபோதையில் சைக்கிளுக்கு காற்று நிரப்பிவிட்டு பணம் தர மறுத்த நபருக்கு கத்திக்குத்து.


ஆந்திர மாநிலம் வலசபாக்ககா ஊரிலுள்ள சைக்கிள் கடை ஒன்றில் வாலிபர் ஒருவர் மது போதையில் சைக்கிளுக்கு காற்று நிரப்பியுள்ளார். இதையடுத்து சைக்கிளுக்கு காற்று நிரப்பியதற்காக 2 ரூபாய் காசு உரிமையாளர் கேட்டுள்ளார். அதற்கு அவர் தர மறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். 

சூரிய நாராயண ராஜு என்பவர் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு மதுபான கடைக்கு சென்று மது அருந்திவிட்டு உச்சகட்ட மதுபோதையில் வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் உள்ள சைக்கிள் கடை ஒன்றில் தனது சைக்கிளில் காற்று தீர்ப்பதற்காக நிறுத்தியுள்ளார். அப்போது சைக்கிளுக்கு காற்றை நிரப்பி விட்டு தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பியுள்ளார்.இந்நிலையில் அந்த கடை உரிமையாளரான சாம்பா என்பவர் காற்று நிரப்பியதற்கான கூலி 2 ரூபாய் தரவேண்டும் என கூறியுள்ளார்.

இதற்கு தரமுடியாது என்று சூரியநாராயண ராஜு கூறியும் கடையின் உரிமையாளரை தாக்க முயன்றுள்ளார்.இதையடுத்து அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த சாம்பாவின் நண்பரான அப்பாராவ் சூரிய நாராயண ராஜு என்பவரை தடுத்து நிறுத்தியுள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அப்பாராவ் கடையில் இருந்து இரும்பு கம்பியை எடுத்து சூரியநாராயண ராஜூவை கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்நிலையில் இதனால் பலத்த காயமடைந்த சூரிய நாராயண ராஜு சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். இதையடுத்து இரும்பு கம்பி அவரது வயிற்றில் கடுமையாக குத்தியது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பலத்த காயமடைந்த நபரை உடலை கைப்பற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சூரிய நாராயண ராஜு உயிரிழந்துள்ளார். இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சைக்கிள் கடை உரிமையாளரான சாம்பா மற்றும் அவரது நண்பரான அப்பாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.