விக்கிரவாண்டியில் மீண்டும் களம் இறங்கிய சண்முகம்! சுறுசுறுப்பான அ.தி.மு.க.!

தங்கை மகன் லோகேஷ் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் சி.வி.சண்முகம் செம அப்செட். அளவுக்கு மீறிய போதைதான் காரணமாக சொல்லப்படுகிறது.


இதனை வீட்டில் இருந்தவர்கள் கண்டித்த காரணமாக இருக்கலாம் என்பதுதான் நிலவரம். ஏனென்றால், அவரது வீட்டில் கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லையாம்.

முதல் இரண்டு நாட்கள் யாரிடமும் பேசக்கூட முடியாத அளவுக்கு சண்முகம் செம அப்செட். தி.மு.க. சார்பில் பொன்முடி, ஜெகத்ரட்சகன் மட்டுமின்றி பா.ம.க.வின் ராமதாஸும் வந்து சோகத்தை விசாரித்துவிட்டுப் போனார்.

ஆளும் கட்சி சார்பில் யாரும் பேசவில்லை என்பதும் சண்முகத்தின் வருத்தமாக இருந்துவந்தது. இந்த நிலையில் நேற்று பன்னீர்செல்வமும் வேலுமணியும் வந்து முதல்வர் சார்பாக துக்கம் கேட்டிருக்கிறார்கள். அதுவரை சோர்வாக இருந்த சண்முகம், அதன்பிறகுதான் தெம்புக்கு வந்திருக்கிறார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் இறங்கிவிட்டார் சண்முகம். இந்தத் தொகுதியை வென்று காட்டுவதில்தான் இவருக்கு எதிர்காலம் இருக்கிறது என்பதுதான் காரணம் என்கிறார்கள். சண்முகம் வந்ததையொட்டி அ.தி.மு.க. கூடுதல் உற்சாகம் அடைந்திருக்கிறதாம்.