உடலுக்கு நன்மை தருவது தயிரா? மோரா?

வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால் மோர் குடுத்து வரவேற்பதுதான் தமிழர்களின் பண்பாடு. சுவையில் தயிர் சிறந்ததாக இருந்தாலும் மோர் குடிப்பதே உடலுக்கு நல்லது. அதனால் தயிரைக் கடைந்து மோராகக் குடிப்பது உடலுக்குக் குளிர்ச்சி தருவதுடன் ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது.


பசியின்மை காரணமாக வயிறு திம்மென்று இருப்பவர்கள் இஞ்சி கலந்த மோர் குடித்தால் அரை மணி நேரத்தில் பசி எடுத்துவிடும். மோரில் வைட்டமின் பி12, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிரம்பி இருப்பதால் உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது.

நீர் மோரில் புளிப்பு, உப்பு, காரம், துவப்பு போன்ற சுவைகள் அடங்கி இருப்பதால் உடல் களைப்பை நீக்கி புத்துணர்வும் கிடைக்கும். மோர் குடிப்பதன் காரணமாக சளி பிடிக்கும் என்பது உண்மை அல்ல. ஏனென்றால் மோர் சிறந்த பிணி நீக்கி ஆகும்.

மிகவும் புளிப்பான மோர் சாப்பிடக்கூடாது. கோடை காலத்தில் விதவிதமான குளிர்பானங்களை வாங்கி உட்கொள்வதைவிட மோர் வாங்கிக் குடிப்பது சிக்கனமானது. கோயில் திருவிழாக்களில் மோர் தானம் அளிப்பதே உயர்ந்த தொண்டாக கருதப்படுவதன் காரணம், இதன் அளப்பரிய மருத்துவக் குணங்களால்தான்.