இளம்பெண்களை கொலை செய்து சடலத்துடன் உடலுறவு! பீதி கிளப்பும் சைக்கோ!

சினிமா படங்களில் வருவதுபோல, பெண்களை பலாத்காரம் செய்து, கொன்று வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.


மேற்கு வங்கத்தில் உள்ள ஹூக்ளியின் சுற்றுப் புறம், ஈஸ்ட் பர்தமான் பகுதிகளில் திடீரென 5 பெண்கள் மாயமாகினர். அவர்கள் எங்கே சென்றனர் என்ற விவரம் தெரியாத நிலையில், போலீசார் வழக்குப பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், ஈஸ்ட் பர்தாமான் பகுதியை சேர்ந்த கம்ருஜாமான் சர்கார் என்ற நபர், பெண் ஒருவரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றுவிட்டு, அதன் பின், அந்த சடலத்தை பலாத்காரம் செய்திருக்கிறான்.

இதன்பேரில், போலீசார் அவனை கைது செய்தனர். 42 வயதாகும் அவன், காய்லான் கடை தொழில் செய்து வந்துள்ளான். இந்நிலையில், இவனை தீவிரமாக விசாரித்ததில், இதுபோல மேலும் சில பெண்களை பலாத்காரம் செய்துள்ளதாகவும், கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளான்.

தற்சமயம், 12 நாள் போலீஸ் காவலில் அவனை எடுத்துள்ள போலீசார், ஹூக்ளி, ஈஸ்ட் பர்தாமான் பகுதிகளில் காணாமல் போன பெண்கள், மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை மீண்டும் ஆய்வு செய்து, அதில் சர்காருக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரித்து வருகின்றனர்.