கண்ணை மறைத்த காதல்.. மோகம்..காமம்..! அண்ணனுடன் சேர்ந்து தங்கை எடுத்த விபரீத முடிவு! ஆடிப்போன உறவுகள்..!

அண்ணன் தங்கை முறை என்பதால் காதலிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால் ஜோடியாக தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.


கடலூர் மாவட்டம் தொரப்பாடி கிராமத்தை சேர்ந்த சுவாதி என்பவர் செவிலியர் கல்லூரியில் படித்து வந்தார். இவரும், கோட்டலாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளியான மதன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் காதலிப்பது வீட்டிற்கு தெரியவர உறவு முறையில் பார்க்கும்போது இருவருமே அண்ணன், தங்கை என வருவதால் காதலை கைவிடுமாறு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் எதிர்ப்பு தெரிவிப்பதற்குள் இவர்களது காதல் முத்திவிட்டதால் எப்படியாவது ஒன்று சேரவேண்டும் அல்லது உயிரிழந்து விட வேண்டும் என முடிவு செய்துள்ளனர். இதையடுத்து நேற்று கல்லூரியில் வகுப்பு முடிந்து வந்த சுவாதியை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு பல இடங்களுக்கு சென்றுள்ளார் மதன். கடைசியில் வேலூர் மாவட்டம் பணப்பாக்கம் ரயில் நிலையம் அருகே வந்துள்ளனர்.

சிறிது நேரம் மனதார பேசிவிட்டு தண்டவாளத்தின் நடுவில் போய் நின்றுள்ளனர். ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு கைகளை இறுக்கிக்கொண்டும், கண்களை மூடிக்கொண்டும் நின்றுள்னர். அப்போது அந்த வழியே ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அதிவேகமாக வந்து கொண்டிருந்த ரயிலின் ஓட்டுநர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

எனினும் ரயிலை நிறுத்த முடியாது என்பதால் அந்த காதலர்கள் மீது ரயில் ஏறிவிட்டு அந்த இடத்தை கடந்து சென்றது. இதில் இருவரது உடல்களும் சிதறி தூக்கி வீசப்பட்டனர். ரயில் ஓட்டுநர் அளித்த தகவலில் சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உறவினர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.