முதுகுக்குள் கத்தி! அப்படியே தையல் போட்ட கடலூர் அரசு டாக்டர்கள்! வலியால் துடித்த இளைஞர்! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

கடலூரில் அறுவை சிகிச்சை செய்யும்போது முதுகில் கத்தித் துண்டை வைத்து தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்த பாரதி என்பவருக்கும் ஜானகிராமன் என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் பாரதியை, ஜானகிராமன் கத்தியால் குத்தினார். இதில் பாரதிக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை அடுத்து கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாரதி. அப்போது அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பின்னர் தையல் போடப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு முன்னர் சாதாரணமாக இருந்த பாரதி தையல் போட்ட பின்னர் வலி பொறுக்க முடியாமல் கத்தத் தொடங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அவரது முதுகை எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அறுவை சிகிச்சையின்போது கத்தியின் உடைந்த துண்டு ஒன்று முதுகுப் பகுதியில் இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைப் பார்த்து உறவினர்களும் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் பாரதி. அங்கு அறுவை சிகிச்சை மூலம் முதுகில் இருந்த உடைந்த கத்தித் துண்டு அகற்றப்பட்டது. பின்னர்தான் வலியில் இருந்து விடுதலை பெற்றார் பாரதி.  

ஆனால் இது குறித்து கடலூர் மக்கள் நல பணிகள் இணை இயக்குநர் ரரமேஷ்பாபு வேறு விதமாக பதில் அளித்துள்ளார். "பாரதி முதுகில் கத்தி இருப்பது தெரியும் என்றும் வேண்டும் என்றே முதுகில் கத்தி துண்டை வைத்து தையல் போடவில்லை என்றும் தெரிவித்தார். அதிகம் ரத்தம் வெளியேறியதாலேயே மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததாகவும் விளக்கம் அளித்தார் ரமேஷ்பாபு.