வகுப்பறை வாசலில் ஆசிரியை கட்டித் தழுவி கதறிய மாணவ,மாணவிகள்..! நெகிழ வைக்கும் சம்பவம்!

கடலூரில் உள்ள அரசு பள்ளியில், ஆசிரியர் இடமாற்றத்தால் மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுத மாணவர்கள் சமாதனாம் செய்து பின்னர் பள்ளி விட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே அமைந்துள்ளது. மா.புதூர். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில் மா.புதூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  இப்பள்ளியில் படிக்கும் மாணவ , மாணவிகள் இடம் ஆசிரியர் சாந்தி அன்பு செலுத்தி கனிவுடன் நடந்து கொள்ளவார். 

இந்நிலையில், ஆசிரியை சாந்தி அவர்களை திடீரென்று ராமநத்தம் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.  இதைத்தொடர்ந்து நேற்று மதியம் பள்ளியில் ஆசிரியை சாந்திக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. 

இந்த விழாவில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையில், மாணவ, மாணவிகள் சாந்தியின் இடமாற்றம் தாங்கி கொள்ள முடியாமல், கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.  இதனை கண்ட பெற்றோர் மற்றும் ஆசிரியரும் கண்ணீர் விட்டானர். பின்னர் சாந்தி அவர்களை சமாதானம் செய்து பிரிய விடைபெற்று சென்றார். இந்த நெகிழச்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.