மனைவியை அருகில் வைத்துக் கொண்டு காதலிக்கு தாலி! 2 லட்டு சாப்பிட்ட ராணுவ வீரர்!

சத்தீஸ்கரில் உள்ள ஜஸ்பூர் மாவட்டம் பக்டல் கிராம பஞ்சாயத்தில் நடைபெற்ற வினோத திருமணம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


அனில் பைக்ரா என்பவர் சிஆர்பிஎப் ஜவானாக பணியில் இருந்து வருகிறார். இவருக்கு அருகில் இருந்த கிராம பெண் ஒருவருடன் 4 வருடங்களுக்கு முன்பாக திருமணம் ஆனது. ஆனாலும், அங்கன்வாடியில் பணி புரியும் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனால், தனது மனைவியை மிகவும் வற்புறுத்தி, அங்கன்வாடி பெண்ணை திருமணம் செய்துகொள்ள அனுமதி பெற்றுள்ளார்.

இதற்கு இவர் ஊர் மக்களிடம் கூறியது, மனைவியுடன் குழந்தை இல்லாததால் வேறு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து விட்டேன். இதற்கு மனைவியும் ஒப்புக்கொண்டார் என்றார். இந்நிலையில், திங்கள்கிழமை அன்று, ஒரே மேடையில் மனைவியை அருகில் அமர்த்திக்கொண்டு காதலித்த பெண்ணை அனில் திருமணம் செய்துகொண்டது அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியது. 

இதையறிந்த சிஆர்பிஎப் மேல் அதிகாரி ஒருவர், "பணியில் இருக்கையில் ஒருவர் எக்காரணம் கொண்டும் இரு திருமணங்கள் செய்திருக்க கூடாது. இது விதிமுறைகளில் இருக்கும் ஒன்று. ஆதலால், அனில் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.