வீட்டுக் கூரை மீது அழையா விருந்தாளி! அலறியடித்து ஓடிய கிராம மக்கள்! திக் திக் நிமிடங்கள்!

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை வீட்டுக் கூரையின் மீது இருந்த வீடியோ வெளியாகி உள்ளது


கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து வரும் கன மழை வெள்ளத்துககு 40 பேர் பலியாகியுள்ளனர். 14 பேரை காணவில்லை. 5 லட்சத்து எண்பத்தி 1702 பேரை காணவில்லை என பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விமானம் மூலம் பார்வையிட்ட நிலையில் அவருக்கு வெள்ள நிலைமைகளை மாநில முதலமைச்சர் எடியூரப்பா விளக்கினார் மேலும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவியும் அவர் அறிவித்துள்ளார்.

பல்வேறு ஊர்களில் வெள்ளம் புகுந்து உள்ள நிலையில் ஆறுகளில் இருந்து அடித்து வரப்படும் முதலைகள் பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் மக்களை அச்சத்துக்கு உள்ளாக்குகின்றன அந்த வகையில் பெல்காம் மாவட்டம் ரேபாக் தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் ஒரு வீட்டின் கூரையின் மீது முதலை இருந்ததால் மக்கள் அதிர்ச்சியும் பீதியும் அடைந்தனர் .

இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் வனத்துறையினர் வருவதற்கு முன்பாகவே மக்கள் அச்சம் காரணமாக முதலையின் மீது கல் உள்ளிட்டவற்றை வீசி எறிந்ததால் அங்கிருந்து தப்பி ஓடிய முதலை வேறு இடத்தில் பதுங்கி விட்டது. இதனால் வனத்துறையினர் அதனை தேடி வருகின்றனர் முதலை ஊருக்குள் பதுங்கி இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.