இளம்பெண்களை தருவதாக கூறி 65 வயது முதியவரை ஆசைவார்த்தை காட்டியும் மிரட்டியும் சுமார் 70 லட்சத்திற்கு மேலான பணத்தை பறித்துள்ள கும்பலை போலீசார் வளைத்துப் பிடித்துள்ளனர்.
டேட்டிங் ஆப்பில் லாக் இன் செய்த 65 வயது பெருசு..! இளம் அழகியிடம் இருந்து வந்த அழைப்பு! நொடியில் பறிபோன ரூ.70 லட்சம்!

மும்பையில் 65 வயது முதியவர் ஒருவர் டேட்டிங் ஆப் எனப்படும் பெண்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்கும் ஆன செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அதனை சில நாட்கள் பயன்படுத்திய பிறகு அவருக்கு தொலைபேசி மூலம் கால் வந்துள்ளது. அதில் நீங்கள் இளம் பெண்ணுடன் அடிக்கடி பழகுவதற்கும் நேரில் சந்தித்து பேசுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.
அதற்கு மேம்பர்ஷிப் எனப்படும் சந்தாவை கட்டவேண்டும் என தெரிவித்துள்ளனர். அதற்கு அவர் வேண்டாம் நான் நீக்கி விடுகிறேன் இந்த செயலியை என தெரிவித்துள்ளார். பின்னர், ஆசைவார்த்தை காட்டியதால் முதலில் சந்தாவை கட்டியுள்ளார்.
ஒரு சில மாதங்களுக்கு பின்னர் , நீக்க முடிவு செய்த முதியவருக்கு கால்கள் மூலம் மிரட்டல் வந்தது. இதுவரை சுமார் 73.5 லட்சம் ரூபாய் வரை பரிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இறுதியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
இந்த சிக்கலான வழக்கை விசாரித்து வந்த காவல்துறையினர் கொல்கத்தாவில் இயங்கி வரும் போலி கால் சென்டரில் இருந்து தான் இவருக்கு இதுபோன்ற மிரட்டல்கள் வந்து இருக்கிறது என தெரிந்து கொண்டனர். உடனடியாக அங்கு சென்று இளம்பெண் மற்றும் திருநங்கை உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.