விதவை பெண்களை வைத்து ஆபாசப்படம் எடுத்த கணவன் - மனைவி.! சேலம் பியூட்டி பார்லரில் அரங்கேறிய பரபரப்பு சம்பவம்!

சேலத்தில் கணவனை இழந்தப் பெண்களிடம் உதவி செய்வதாக கூறி அவர்களை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் ஒன்று அதை வீடியோ எடுத்து மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.


சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த ரகுமான் அவரது மகன் லோகநாதன் மற்றும் மருமகள் ரூபா 3 பேரும் சேரந்து பெண்களை மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். இதற்காக இவர்கள் கணவரை இழந்த பெண்களை மட்டுமே குறிவைத்துள்ளனர். 

கணவரை இழந்த ஒரு பெண் முதலில் லோகநாதன் கையில் சிக்கி உள்ளார். அந்த பெண்ணுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் அதை வீடியோ எடுத்து வைத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுவிடுவோம் என மிரட்டி உள்ளார். இந்த மிரட்டலை வைத்து அந்த பெண் விபச்சாரத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளார்.

லோகநாதனின் நண்பர்களான பிரதீப் மற்றும் சிவா) ஆகியோரும் அஸ்தம்பட்டி பகுதியில் கணவரை இழந்த பெண்ணை மிரட்டி ஆபாசமாக படம் எடுத்துள்ளனர். பின்னர் அந்த படங்களை காட்டி பெண்களை மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயற்சி செய்துள்ளனர்.

பெண்களை பாலியல் வண்கொடுமை செய்து மிரட்டும் இந்த கும்பல் வீடியோக்களை வெளியிடாமல் இருக்க போலீசுக்கு சொல்லக் கூடாது என்று மிரட்டியுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட சில பெண்கள் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதனையடுத்து லோகநாதன், பிரதீப், சிவா ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆபாசப்படம் எடுத்தது, பாலியல் வன்கொடுமை செய்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.