தமிழ் தான் பர்ஸ்ட்! மத்த மொழி எல்லாம் நெக்ஸ்ட்! மகளுக்கு கற்றுக் கொடுக்கும் தோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது மகளுடன் தமிழில் உரையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.


 எங்க தல தோனிக்கு தமிழில் விசில் போடத்தான் வேண்டும். தான் தமிழில் பேச முயற்சிப்பது மட்டுமன்றி தனது மகள் ஜிவாவுக்கும் தமிழ் கற்றுக் கொடுத்து கலக்கி வருகிறார்

ஐ.பி.எல். முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பேட்டிங் செய்யப் பணித்தது. 17.1 ஓவரில் 70 ரன்களுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் ஆட்டமிழந்த நிலையில், பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 17.4 ஓவரில் 71 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

ஆட்டம் ஒருபுறம் ரசிகர்களை கவர்ந்தாலும் மற்றொரு புறம் கிரிக்கெட் தமிழ் ரசிகர்களுக்கு வித்தியாசமான விருந்தும் படைக்கப்பட்டது. தமிழ் தெரியாத தமிழக விருந்தாளி என கருதப்பட்ட தோனி தமிழில் பேசியதுதான் அது. 

சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற தோனி அவரது மகள் ஜிவா ஆகியோர் தமிழில் உரையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் பலரையும் கவர்ந்து வருகிறது. தனது மகளுக்கும்  தமிழ் கற்றுக் கொடுத்து தோனி உரையாடும் காட்சி தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பல்வேறு மொழிகளில் எப்படி இருக்கிறாய் என தோனி கேட்க அதற்கு அந்த மொழிகளிலேயே நன்றாக இருக்கிறேன் என்று ஜிவா கூறுகிறார். ஆனால் இதற்கு தோனி முதலில் தேர்வு செய்தது தமிழ் மொழி என்பது குறிப்பிடத்தக்கது.