கிரிக்கெட் வீரர் ஆன்ட்ரே ரஸ்ஸலின் 2வது மனைவியான நடிகை காயத்ரி? வைரலாகும் புகைப்படம்!

இரண்டு நாட்களுக்கு முன்பு விஜய் சேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்து பிரபலமான நடிகை காயத்ரி அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார் .


இவருக்கு பலரும் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனையடுத்து தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி கூறினார். இந்நிலையில் காயத்ரி ட்விட்டரில் ஒரு டீவீட்டை பார்த்து வாயடைத்து போனார்.  அதற்கு காரணம் ஸ்ரீனி மாமா போட்ட டிவீட் தான்.

ஸ்ரீனி மாமா சமூக வலைதளத்தில் சிறந்த பொழுதுபோக்கர் ஆவார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டீமில் விளையாடும் ஆண்ட்ரீ ரஸ்ஸல்-இன்  மனைவி கடைசியாக நடந்த ipl போட்டியில் தனது  கணவரை கை தட்டி உற்சாக படுத்தினார். 

அதை பார்த்த ஸ்ரீனி மாமா தமிழ் நடிகை காயத்ரி kkr -இன் அதிரடி ஆட்டக்காரர் ரஸ்ஸலின் மனைவி என்பது இத்தனை நாட்கள் தெரியாமல் போயிற்றே என்று கிண்டலாக  அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ஆண்ட்ரீ ரஸ்ஸல்-இன் மனைவி அப்படியே தமிழ் நடிகை காயத்ரி போலவே இருப்பதாலும், இருவரது உருவ ஒற்றுமை வியக்க கூடிய வகையில் இருப்பதாலும் ஸ்ரீனி மாமா அந்த டீவீட்டில் கூறியிருந்தார்.

இந்த டீவீட்டை பார்த்த காயத்ரி "என்ன" என்று ஆச்சரியத்துடன் வியந்து போய் ஸ்ரீனிமமா டிவீட்க்கு பதில் அளித்தார்.