பிரபல தமிழ் நடிகையை மனைவியாக்கப் போகும் இளம் கிரிக்கெட் வீரர்! திருமண ஏற்பாடுகள் ஜரூர்!

பிரபல தமிழ் நடிகையை மணக்க இருக்கிறார் கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே. இதுகுறித்த தகவல்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.


இந்திய கிரிக்கெட் அணியில் அடிக்கடி உள்ளே வெளியே ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கும் மனிஷ் பாண்டே மற்றும் தமிழ் திரையுலகில் உதயம் NH4 படம் மூலம் அறிமுகமான நடிகையான அஷ்ரிதா ஷெட்டி இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 

இவர்கள் இருவருக்கும் வருகிற டிசம்பர் மாதம் மும்பையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் திருமணம் நடக்க இருப்பதாகவும் இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.

அஷ்ரிதா ஷெட்டி பெயர் வைக்கப்படாத தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். மனிஷ் பாண்டே விஜய் ஹசாரே டிராபியில் கர்நாடகா அணியை வழி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.