டிக் டாக் மோகம்! பைக் சாகச இளைஞருக்கு ஏற்படுத்திய சோகம்! வைரல் வீடியோ!

டிக் டாக் மூலம் தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள நினைத்து மோட்டார் பைக்கில் சாகசம் செய்த இளைஞர் படுகயாமடைந்த நிலையில் பிரபலமாகி வருகிறார்.


சமூக வலைதளங்கள் மூலம் தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள உலகம் முழுவதும் ஏராளமான ஆண்களும், பெண்களும் இன்னும் சொல்லப் போனால் திருநங்கைகளும் தங்களை திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக டிக் டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலிக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆடல்கள், பாடல்கள், சண்டைக்காட்சிகள் என விதவிதமாக வீடியோக்களை வெளியிட்டு இன்றைய இளைஞர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சினிமா ஸ்டன்ட் காட்சிகளில் கதாநாயகர்கள் சாகசம் செய்வது போல் தானும் செய்ய நினைத்த மும்பை தாராவியை சேர்ந்த ஒரு இளைஞர் மோட்டார் பைக்கில் வேகமாக வந்து செங்குத்தாக நிற்க வைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் தலைக்குப்புற விழுந்த அந்த இளைஞர் முகத்தில் சிராய்ப்பு ஏற்பட்டதுடன் படுகாயங்கள் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதுபோல் சாகசம் செய்பவர்கள் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்தான் செய்யவேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். குறைந்தபட்சம் இந்த இளைஞர் ஹெல்மெட் அணிந்திருந்தாலாவாது பெரிய பாதிப்பிலிருந்து தப்பித்து இருக்கலாம். ஏற்கனவே மும்பையில் இதுபோன்ற சாகசங்கள் செய்ய முயற்சித்த இளைஞர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைக்காட்சி விளம்பரங்களில் புதிய வாகனங்கள் விளம்பரத்தில் சாகச காட்சிகள் வரும்பொழுது கூட அதில் எச்சரிக்கை வாசகம் இடம்பெற்றிருக்கும். அதவாது இந்த விளம்பரத்தில் வரும் காட்சிகள் கிராபிக்ஸ் அல்லது போதிய முன்னெச்சரிக்கையுடன் செய்யப்படுகிறது என்ற வாசகங்கள் விளம்பரத்தில் இடம்பெற்றிருக்கும். என்னதான் சாகசம் செய்தாலும் சமூக வலைதள பயனாளர்களை பொறுத்தவரை இது கோமாளித்தனம் என்றுதான் கருதுவார்கள். 

இருசக்கர வாகன ஓட்டிகள் மீது அக்கறை கொண்ட காவல்துறைதான் நாடு முழுவதும் போதுமான அறிவுரையும் விழிப்புணர்வும் செய்துகொண்டுதான் இருக்கிறது. மேலும் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அவ்வப்போது அபராதம் விதித்ததாலும் அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதாக தெரியிவல்லை. இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபட்டு தங்கள் உயிருக்கு தாங்களே உலைவைத்துக் கொள்கின்றனர் என்றால் அது மிகையில்லை.