இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு வெங்காய விலை எகிறிக் குதிக்கிறது.
ஊறுகாய் நிதியமைச்சர்! நிர்மலா சீதாராமனுக்கு செம கலாய்!

பெரிய வெங்காயம் 150 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் 200 ரூபாய்க்கும் விற்பனயாகி வருகிறது. வெளிநாட்டில் இருந்து கடந்த மாதமே வந்துவிடும் என்று சொல்லப்பட்ட வெங்காயம், அடுத்த மாதம்தான் வருகிறதாம்.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் வெங்காய விலை ஏற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் மக்கள் பெரும் துன்பத்தில் இருக்கிறார்கள் என்று பேசப்பட்டது. அதற்கு நிர்மலா சீதாராமன் கொடுத்த பதில்தான் பெரும் பரபரப்பைத் தூண்டியுள்ளது. ஆம், ‘நான் வெங்காயமும் பூண்டும் உணவில் சேர்த்துக் கொள்ளாத குடும்பத்தில் இருந்து வந்தவள். எனவே அது பற்றி எனக்கு கவலையில்லை’ என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்திருக்கிறார்.
வெங்காயம் சாப்பிடுவதும் தவிர்ப்பதும் தனிமனித ருசி. அதை நகைச்சுவையாகத்தான் நிதி அமைச்சர் சொன்னதாக யாரும் சப்பைக்கட்டு கட்ட முடியாது. ஏனென்றால் சிரித்துக் கொண்டே பேசும் நிலையிலா பொருளாதாரம் இருக்கிறது? வெங்காயம் பற்றிய இப்பேச்சின் உள் ஒரு மிகப் பெரிய திமிர் தொனிக்கிறது. யாரும் நிரந்தரமாய் மேலேயே இருந்ததில்லை.இன்றைய ஆணவம் நாளைய கேவலத்தின் முன்னறிவிப்புதான்.
இந்த நிலையில் ப.சிதம்பரம் கொடுத்திருக்கும் ரிவீட் செம. அவர் ஒரே வரியில், ‘ஊறுகாய் மட்டும்தான் சாப்பிடுகிறாரா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஓ... தயிரும், எலுமிச்சம் பழமும் விலை உயர்ந்தால் மட்டும்தான் நிர்மலா கவலைப்படுவாரோ..?