இயக்குனர் சங்கருக்கும் கால் முறிவு..? இந்தியன் படப்பிடிப்பு விபத்து சோகம் தொடர்கிறது.

கமல் நடிக்கும் இந்தியன் - 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையை அடுத்த செம்பரம்பாக்கத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நிகழ்ந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.


படப்பிடிப்புத் தளத்தில் அமைக்கப்பட்ட கிரேன் நேற்று இரவு திடீரென சரிந்து விழுந்தது. அதில், உதவி இயக்குநர் கிருஷ்ணா, உதவி நடன இயக்குநர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகிய மூவரும் உயிர் இழந்துள்ளனர்.

மேலும் பத்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். படத்தின் இயக்குநர் சங்கருக்கு காலில் முறிவு ஏற்பட்டு, அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.