சேற்றில் சிக்கி இறந்த தாய்! அது தெரியாமல் 3 நாட்களாக அருகே காத்திருக்கும் கன்று! நெகிழ வைக்கும் சம்பவம்!

சேற்றில் சிக்கிய பசுவுக்கு நேர்ந்த அவலம்; தாயின் பிரிவால் தவிக்கும் கன்றின் பாசப் போராட்டம்


புதுச்சேரியில் சேற்றில் சிக்கி உயிரிழந்த பசுவை பிரிய மறுத்த கன்றின் பாசப் போராட்டம் பார்த்தவர்களை கலங்கச் செய்கிறது. முக்கிய சுற்றுலாதலமும், முக்கிய நீர் ஆதரமுமான ஊசுட்டேரி கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் நீர் வற்றி சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. சுற்றுவட்டார கிராம மக்கள் கால்நடைகளின் மேய்ச்சலுக்கு ஊசுட்டேரியை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏரியில் தனது கன்றுக் குட்டியுடன் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று, அங்கிருந்த தண்ணீர் குட்டையில் நீர் குடிக்கும் போது சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்தது

தாய் இறந்தது கூட தெரியாத கன்றுக் குட்டி, தன்னுடைய தாய், குட்டையிலிருந்து எழுந்து வந்துவிடும் என்ற நம்பிக்கையில், இறந்த பசுமாட்டிற்கு அருகிலேயே படுத்துக்கிடக்கிறது. பெற்றோர்களை கூட கவனிக்க நேரமில்லாத பிள்ளைகள் மத்தியில் ஐந்து அறிவு ஜீவனின் பாசப்போராட்டம் கவனத்துக்குள்ளாகியுள்ளது.